கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுப்பது குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு, தற்காப்பு மற்றும் உரிய நேரத்தில் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் உலகளாவிய கல்லீரல் நோய்களின் சுமையைக் குறைப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மனித உடலில் நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானம் போன்ற செயல்பாடுகளில் கல்லீரலின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட வருடாந்திர உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு தினமாகும்.
500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்யும் கல்லீரல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் இயற்கையான திறனைக் கொண்டுள்ளது ஆனால் நோய் அறிகுறிகள் பெரும்பாலும் தாமதமாகவே வெளிப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Solid Habits, Strong Liver" என்பதாகும்.