TNPSC Thervupettagam

உலக ஜனநாயக (மக்களாட்சி) நிலை அறிக்கை 2021

November 25 , 2021 1454 days 643 0
  • இந்த அறிக்கையானது சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் உதவிக்கான நிறுவனத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாடுகளின் எண்ணிக்கை என்பது ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
  • இந்த அறிக்கையானது ஜனநாயகம், கலப்பு மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் என்று மூன்று முக்கிய ஆட்சி வகைகளைக் குறிப்பிடுகின்றது.
  • கலப்பு மற்றும் சர்வாதிகார ஆட்சி ஆகிய இரண்டுமே ஜனநாயகம் சாராதவை என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
  • பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிலைகளை “பிற்போக்கான நடைமுறைகளை நோக்கி நகரும் மிகவும் கவலையளிக்கும் வகையிலான எடுத்துக் காட்டுகள்” என்று இந்த அறிக்கை குறிப்பிட்டது.
  • இருப்பினும், இந்தியா 2000 ஆம் ஆண்டு முதல் நடுத்தர அளவிலான செயல்திறன் கொண்ட ஜனநாயகம் என்ற வகைப்பாட்டிலேயே உள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 உறுப்பினர் நாடுகள் (ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா) ஆகியனவும் குறிப்பிடத் தக்க அளவில் ஜனநாயக வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்