TNPSC Thervupettagam

உலக வாழ்விட தினம் 2026 - அக்டோபர் 05

October 7 , 2026 4 days 94 0
  • போதுமான தங்குமிடம் மற்றும் மனித குடியிருப்புகளின் நிலையை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குப் போதுமான வீட்டுவசதி இல்லை, அதே நேரத்தில் 1.1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் முறைசாரா குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
  • இந்த நாளானது 'நகர்ப்புற அக்டோபர்' (Urban October) மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது அக்டோபர் 31 அன்று உலக நகரங்கள் தினத்துடன் முடிவடைகிறது.
  • போதுமான தங்குமிடத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) 1985 ஆம் ஆண்டில் உலக வாழ்விட தினத்தை நியமித்தது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Adequate Housing for All” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்