நிதி ஆயோக் மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை இணைந்து “ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தகம்: உள்ளார்ந்த டிஜிட்டல் முறையை கொண்ட ஒரு பாரதத்தை உருவாக்கச் செய்வதற்கான செயல்திட்டத்தை உருவாக்குதல்” (Connected Commerce: Creating a Roadmap for a Digitally Inclusive Bharat) என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் டிஜிட்டல் நிதி உள்ளடக்கத்தினை விரைவுபடுத்தச் செய்வதிலுள்ள சவால்களை இந்த அறிக்கையானது அடையாளம் காண்கிறது.
நாட்டின் 1.3 பில்லியன் குடிமக்களும் டிஜிட்டல் சேவையைப் பெறச் செய்வதற்கான பரிந்துரைகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது.
முக்கியப் பரிந்துரைகள்
வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான செயல்பாட்டுத் தளங்களை வலுப்படுத்துவதற்காக பண வழங்கீட்டு கட்டமைப்பு முறைகளை வலுப்படுத்துதல்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பதிவு முறை மற்றும் குறைதீர்ப்பு முறையை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அவற்றிற்கான கடன் மூலங்களை பரவலாக்கல்.
தகவல் பரிமாற்றுமுறைகளை உருவாக்குதல் மற்றும் நுகர்வோரிடையே மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை இணையதள டிஜிட்டல் வர்த்தக தளங்கள் கொண்டுள்ளனவா என்பதை உறுதி செய்தல்.
வேளாண்மைக்கான வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்களை குறைந்த செலவிலான மூலதனத்தினை பெறச் செய்தல் மற்றும் டிஜிட்டல் முறையின் மூலம் நீண்ட காலம் பயனடைவதற்காக “Phygital” (Physical + digital) என்ற மாதிரியைப் பயன்படுத்துதல்.