நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகங்கள் அமைச்சகம் ஆனது 'பொதுப் பதிவு வசதி' (எனது அன்றாட ரேஷன் எனது உரிமை) என்ற ஒரு இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
11 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இந்தப் பதிவு செய்யும் வசதியானது தொடங்கப் பட்டுள்ளது.
வீடுகளற்றோர், ஆதரவற்றோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் தகுதியுடைய இன்ன பிறப் பயனாளிகள் அன்றாட உணவுப் படிகளுக்காக வேண்டி அதற்கான அட்டைகளைப் பெறுவதற்காக அதனை விண்ணப்பிப்பதற்கான வசதியை பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.
அனைத்து 36 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளன.