TNPSC Thervupettagam

ஏர் இந்தியா ஒன் - B777 விமானம்

November 29 , 2020 1696 days 679 0
  • குடியரத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் இருந்து திருப்பதி வரை ஏர் இந்தியா ஒன்-B 777 விமானம் மூலமான முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
  • ஏர் இந்தியா ஒன் என்பது இந்தியாவின் வி.வி.ஐ.பி. விமான வகையாகும்.
  • இந்த விமானத்தை இந்தியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோர் பயன்படுத்த உள்ளனர்.
  • இதே போன்று வி.வி.ஐ.பிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பி 747-400 விமானத்தை விடவும் இது அதிக தூர வரம்பைக் கொண்டுள்ளது.
  • புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இந்திய விமானப்படை விமானத் தலைமையகத் தகவல் தொடர்புப் படையால் இது இயக்கப்பட உள்ளது.
  • இது ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • இவ்வாறாக நிறுவப்பட்ட இந்தப் பாதுகாப்பு அமைப்பானது ஏர் இந்தியா ஒன் விமானத்தினை அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையாகக் கொண்டு வருகிறது.
  • இந்தியாவின் முதல் மூன்று அரசப் பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் இந்த வகையிலான மூன்று விமானங்களுக்கு ராஜ்தூத், ராஜ்ஹன்ஸ் மற்றும் ராஜ்கமல் என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்