March 17 , 2021
1593 days
671
- இந்தியக் கடற்படைக் கப்பலான ஜலஷ்வா கொமோரோசில் உள்ள அஞ்சுவான் என்ற துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது.
- இக்கப்பல் 1000 மெட்ரிக் டன் எடை கொண்ட அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்று உள்ளது.
- கொமோரோசில் சரக்குகளை ஒப்படைத்தப் பிறகு ஐஎன்எஸ் ஜலஷ்வா இஹோவ்லா (Ehoala) என்ற துறைமுகத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும்.
- அங்கு 1000 மெட்ரிக் டன் எடையுள்ள அரிசி மற்றும் 1,00,000 ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளைக் கொண்ட சரக்குகளை அது வழங்கும்.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்துப் பெறப்பட்ட ஒரே இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா ஆகும்.
Post Views:
671