TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் விக்ராந்த் தொடக்க விழா

September 7 , 2022 992 days 446 0
  • கொச்சி தளத்தில், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவுப் பலகையை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்தக் கப்பலானது, இந்தியக் கடற்படையின் உள்நாட்டுப் போர்க்கப்பல் வடிவமைப்பு வாரியத்தினால் (WDB) வடிவமைக்கப்பட்டு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் கட்டமைக்கப்பட்டது.
  • இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டமைக்கப்பட்ட, இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவிலான மிகப்பெரிய கப்பல் இதுவாகும்.
  • இது 7,500 கடல் மைல்கள் தொலைவு வரை பயணிக்கும் திறனுடன், அதிகபட்சமாக 28 நாட் வேகம் இயங்கக் கூடிய வகையில் (ஒரு மணி நேரத்திற்கு 52 கி.மீ.) வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இது 262 மீட்டர் நீளமுடையக் கப்பலாகும்.
  • 45,000 டன் எடை கொண்ட இந்தப் போர்க்கப்பலானது ரூ. 20,000 கோடி செலவில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இது 18 மாடிகளைக் கொண்ட ஒரு மிதக்கும் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
  • அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இத்தகையப் பெரிய போர்க் கப்பல்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்