TNPSC Thervupettagam

தேசிய சட்ட சேவைகள் ஆணையம்

September 7 , 2022 991 days 1082 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், நீதிபதி சந்திரசூட் அவர்களைத் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) செயல் தலைவராக நியமித்துள்ளார்.
  • நீதிபதி U.U.லலித் இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக (CJI) பதவி உயர்த்தப் பட்டதையடுத்து, காலியான அப்பதவியை இவர் ஏற்கிறார்.
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையமானது 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • சமூகத்தின் நலிந்தப் பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியத் தலைமை நீதிபதி அவர்கள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைமைப் புரவலராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி இந்த ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்