TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்திய அரசின் தலைமை

December 6 , 2022 944 days 454 0
  • டிசம்பர் 01 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) மாதாந்திர சுழற்சி முறை தலைமைப் பதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.
  • 2021-22 ஆம் ஆண்டில் அச்சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியாவின் இரண்டு ஆண்டு கால பதவிக் காலத்தில் இந்தியா இவ்வாறு பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும்.
  • இந்தியா முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது.
  • வெளி விவகாரங்கள் துறை அமைச்சரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்ஸும் டிசம்பர் 14 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையில் M.K.காந்தி அவர்களின் மார்பளவு உயரம் உள்ள சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.
  • இந்தத் தினமானது காந்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வருகைத் தந்ததைக் குறிக்கிறது.
  • சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டினைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, உலகளாவியப் பலதரப்பு உறவுகளின் மையப் பகுதியாகும்.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது, 15 உறுப்பினர் நாடுகளைக் கொண்டது : அவற்றுள் 5 நிரந்தர மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள் ஆகும்.
  • பத்து நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இரண்டு வருட காலத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியா ஏழு முறை நிரந்தரமற்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியா எட்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்