கிரித் பரிக் குழுவானது, எரிவாயு விலை நிர்ணயம் குறித்த தனது அறிக்கையினை சமீபத்தில் சமர்ப்பித்தது.
இது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் முழு அளவிலான விலையிடல் சுதந்திரத்தை வழங்குவதற்குப் பரிந்துரை செய்தது.
வழக்கமான எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையினை, இந்திய அரசு முற்றிலுமாகத் தடையற்ற முறையில் மற்றும் சந்தைக்கேற்ற முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த இயற்கை எரிவாயுவில் இது 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவாகும்.
வழக்கமான எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்களில் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான உச்சவரம்பு வீதத்தை ஒரு mmBTU (Metric Million British Thermal Unit) அளவிற்கு 0.5 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியில் வழக்கமான எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவிற்கான சந்தை நிர்ணய விலையினையும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் KG-D6 போன்ற கடினமான புவியியல் அமைப்புக் கொண்ட தளங்களில் உள்ள தளங்களுக்கு தற்போதுள்ள விலை நிர்ணய சூத்திரத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு இக்குழு பரிந்துரைக்கவில்லை.
தற்போது, ஆழ்கடல், உயர் வெப்பநிலை, உயர் அழுத்த மண்டலங்கள் ஆகியப் பகுதிகளில் உள்ள உள்ள எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்கள், இறக்குமதி செய்யப் பட்ட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலையின் கூறுகளை உள்ளடக்கிய வேறுபட்ட சூத்திரத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன.
இருப்பினும், அவை 12.46 அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பு விலை அளவிற்கு உட்பட்டவையாகும்.