TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரங்களின் விற்பனை குறித்த தரவு

December 5 , 2022 944 days 470 0
  • தேர்தல் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை மும்பை நகரம் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது.
  • மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் 2018 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை எண்கள் மற்றும் மதிப்பின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளன.
  • மதிப்பின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்ட மொத்தத் தேர்தல் பத்திரங்களில் மும்பையின் பங்கு 25.4 சதவீதம் ஆகும்.
  • இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான தேர்தல் பத்திரங்களை கொல்கத்தா நகரம் விற்றுள்ளது.
  • மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகியவை ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்களை அதிக அளவில் விற்பனை செய்துள்ளன.
  • காங்டாக், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் ஒரு தேர்தல் பத்திரம் கூட விற்கப் படவில்லை.
  • அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசினால் இந்தத் தேர்தல் பத்திரம் திட்டமானது தொடங்கப் பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வருடத்திற்கு நான்கு முறை 10 நாட்கள் வரையில் தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன.
  • இவை பெயர் அறியா நன்கொடையாளர்களிடமிருந்து பணத் தொகையினை நன்கொடையாகப் பெற அரசியல் கட்சிகளுக்கு வழி வகை செய்கின்றன.
  • இந்தப் பத்திரங்களை விற்று மீட்டெடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி பாரத ஸ்டேட் வங்கி மட்டுமேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்