இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு திட்டம்
December 4 , 2022 893 days 393 0
இந்திய வரலாற்று ஆராய்ச்சிச் சபை (ICHR) மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து "இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு" என்ற திட்டத்தைத் தொடங்கச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பல்வேறு அறிவியல் களங்களில் இந்திய நாட்டினை ஒரு "விஷ்வ குரு" (உலகத் தலைவர்) ஆக நிலை நிறுத்துவதே இதன் இலக்காகும்.
இந்தியாவின் பொருளாதார வரலாற்றைக் கண்டறிவதற்காக இதே போன்ற திட்டம் ஒன்றினை இந்திய வரலாற்று ஆராய்ச்சிச் சபை தொடங்க உள்ளது.
மருத்துவத் துறையில் இந்தியாவின் பங்களிப்புகளைக் கண்டறிவதற்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வரலாற்று ஆராய்ச்சிச் சபை மற்றொரு திட்டத்தையும் தொடங்க உள்ளது.