TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை கார்பன் வரி 2026

October 15 , 2026 7 days 98 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லைச் சீரமைப்பு பொறிமுறையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அதன் உறுதியான கட்டத்தில் நுழைந்துள்ளதுடன் இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான இணக்கத் தேவைகளை அதிகரித்துள்ளது.
  • இரும்பு மற்றும் எஃகு, அலுமினியம், சிமெண்ட், உரங்கள், மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளை அவற்றின் உட் பொதிக்கப்பட்ட கார்பன் உமிழ்வைக் கணக்கிடுவதற்காக இந்த அமைப்பு உள்ளடக்கி யுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு இறக்குமதியுடன் தொடர்புடைய உமிழ்வுகளுக்கான கொடுப்பனவுகள் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வருடாந்திர அறிவிப்புகள் மற்றும் சான்றிதழ்கள் 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • ஐரோப்பிய ஒன்றிய உமிழ்வு வர்த்தக அமைப்பின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் கார்பன் செலவுக்கு நிகரான விலையை இறக்குமதிகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் கசிவைத் தடுப்பதை இந்த வழிமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணக்கச் செலவுகள், சிக்கலான ஆவணப் பணிகள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சரிபார்க்கப்பட்ட உமிழ்வுத் தரவைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றால் சவால்களை எதிர் கொள்கின்றன.
  • சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவின் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாத ஆய்வின்படி, ஒரு டன் கார்பன் டை ஆக்சைடுக்கு 86.01 அமெரிக்க டாலர் என்ற கார்பன் விலையின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதி 23.94% குறையக்கூடும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்