April 21 , 2026
5 days
97
- ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பிரதேசங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 2026 ஆம் ஆண்டு 17 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தது.
- அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டம், 2023, மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீட்டை வழங்குகிறது.
- 2023 ஆம் ஆண்டில் தனித்தனி திருத்தச் சட்டங்கள் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கும் இதே போன்ற விதிகள் உருவாக்கப்பட்டன.
- இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டது.
- 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
Post Views:
97