புதுடெல்லியின் பிங் லைன் என்ற இளஞ்சிவப்பு நிறக் குறியீடு கொண்ட ஒரு வழித் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையானது டெல்லி மெட்ரோ இரயில் கழகத்தினை உலகின் 4வது மிகப்பெரிய ஓட்டுனரல்லாத மெட்ரோ இரயில் கட்டமைப்பாக மாற்றியுள்ளது.
மஜிலிஸ் பூங்காப் பகுதியை சிவ் விகார் பகுதியுடன் இணைக்கும் பிங் லைன் வழித் தடமானது தலைநகரில் உள்ள நீளமான மெட்ரோ வழித் தடமாகும்.
மேலும் புதுடெல்லியில் ஓட்டுனரல்லாத மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் 2வது மெட்ரோ வழித்தடமும் இதுவாகும்.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தாவரவியல் பூங்கா பகுதியினை ஜனக்பூரி மேற்குப் பகுதியுடன் இணைக்கும் டெல்லி மெட்ரோ இரயில் கழகத்தின் மெஜந்தா வழித் தடத்தில் நாட்டின் முதலாவது ஓட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.