கங்கையின் தனித்துவமான பண்புகளை கண்டறிய மத்திய நீர்வளத்துறை அமைச்சகமானது ஒரு ஆய்விற்கு உத்தரவிட்டுள்ளது.
நாக்பூரை அடிப்படையாகக் கொண்ட NEERI (National Environmental Engineering Research Institute) குழுவானது பாகிரதீ மற்றும் கங்கை ஆகிய நதிகளில் உள்ள 20 மாதிரி மையங்களிலிருந்து நீரின் தரத்தினை மதிப்பீடு செய்துள்ளது.
இந்த ஆய்வானது கதிரியக்கம், நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் தரவுருக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பாக்டீரியாவை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் பாக்டீரியா உண்ணிகளின் தொகுதியைக் கங்கையின் தண்ணீர் மாதிரிகள் கொண்டிருந்தன.
பாக்டீரியா உண்ணிகள் என்பது பாக்டீரியாவை கொல்லும் ஒருவகை வைரஸ் ஆகும்.
இவை பொதுவாக ஓம்புயிரிக்கு மட்டுமல்லாமல் இதர நன்மையளிக்கும் பாக்டீரியாவிற்கும் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்-NEERI
நீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல் மற்றும் தொற்று நோய்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்ற இந்த அமைப்பானது 1858 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
NEERI ஆனது சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ஒரு முன்னோடி ஆய்வகமாகும்.