தொழில்நுட்பத் தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவானது (Technology Information, Forecasting and Assessment Council) ஒரு கடற்பாசி சாகுபடித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
கடற்பாசிகளின் வணிக ரீதியான விவசாயத்தையும் அதன் செயலாக்கத்தையும் ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடற்பாசி சாகுபடியானது கெல்ப் விவசாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது கடற்பாசியைப் பயிரிட்டு அறுவடை செய்யும் ஒரு முறையாகும்.