காட்டு நண்டுகள் (சியிலா செராட்டா) பெருமளவில் உயிரிழப்பதற்கு கழிநண்டு ரியோ வைரஸ் தான் காரணம் என்று ஆந்திரப் பிரதேசம் சமீபத்தில் கண்டறிந்தது.
நாகயலங்கா பகுதி வயல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் இருந்தது குறித்த ஒரு தகவல் மேல்நிலை கடல் அறிவியல் ஆய்வு மையம் (அண்ணா மலைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு) மற்றும் M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு ஆராய்ச்சியில் உறுதிப் படுத்தப் பட்டது.
M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையானது, கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டினம் மற்றும் நாகயலங்கா போன்ற பகுதிகளில் நண்டுகளின் இறப்புப் பதிவினைக் கண்காணித்து வருகிறது.