TNPSC Thervupettagam

காசா போர் நிறுத்த தீர்மானம் 2025

June 18 , 2025 16 days 57 0
  • காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன் வைக்கப் பட்ட தீர்மானத்தின் போது இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியது.
  • ஆனால் 149 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததால், பெரும் ஆதரவுடன் அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய அமெரிக்க நட்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், வாக்களிக்காத 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
  • அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் 10 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன.
  • தெற்காசியா, பிரிக்ஸ் மற்றும் SCO ஆகிய அமைப்புகளின் உறுப்பினர் நாடுகளுள் வாக்களிப்பில் இருந்து விலகிய ஒரே நாடாக இந்தியா தனித்து நிற்கிறது.
  • இந்தியா முதலில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மற்றும் பின் ஓராண்டு காலம் கழித்து அதே மாதத்தில் என இரண்டு முறையில் UNGA காசா மீதான போர் நிறுத்தத் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்