TNPSC Thervupettagam

கானமயில் பாதுகாப்புத் திட்டம்

October 7 , 2026 5 days 75 0
  • ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள பாலைவனத் தேசியப் பூங்காவில், சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இரண்டு ஆண் கானமயில்கள் (Great Indian Bustards - GIBs) முதன்முறையாக காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த வெளியீடானது, மிகக் கடுமையாக அருகி வரும் இனமான கானமயிலைப் பாதுகாப்பதற்கான பஸ்டர்ட் மீட்புத் திட்டத்தின் (Bustard Recovery Programme) ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), ராஜஸ்தான் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • இதற்கு சர்வதேச ஹூபாரா பாதுகாப்பு நிதியத்தின் (IFHC) தொழில்நுட்ப ஆதரவும், தேசிய ஈடுசெய்யும் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் (National CAMPA) நிதி உதவியும் கிடைத்துள்ளது.
  • இந்த வெளியீடானது, இந்த இனத்திற்கான சிறைப்பிடித்தல்-இனப்பெருக்கம் மற்றும் காடுகளில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு படியைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்