கார்பன் பற்றுகைப் பயன்பாடு மற்றும் சேமிப்புக் கொள்கை கட்டமைப்பு - நிதி ஆயோக்
December 4 , 2022 945 days 425 0
நிதி ஆயோக் அமைப்பானது, கார்பன் பற்றுகைப் பயன்பாடு மற்றும் சேமிப்பிற்கான (CCUS) கொள்கைக் கட்டமைப்பின் அறிக்கையைத் தயாரித்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஆண்டிற்கு சுமார் 2.6 ஜிகா டன் கார்பன் உமிழ்வுகளை வெளியிடுவதுடன், உலகில் CO2 வாயுவினை வெளியிடும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
எனவே, கார்பன் பற்றுகைப் பயன்பாடு மற்றும் சேமிப்புக் கொள்கையானது, இந்தியா அதன் கார்பன் நீக்க இலக்குகளை அடைவதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.
கார்பன் பற்றுகைப் பயன்பாடு மற்றும் சேமிப்புக் கொள்கை என்பது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் கைப்பற்றி, கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு (பயன்பாடு) அல்லது மேற்பரப்பிற்குக் கீழே பல ஆயிரம் அடிகளுக்குக் கீழே அதனை நிரந்தரமாகச் சேமித்து வைப்பதற்கு (சேமிப்பு) பயன்படும் ஒரு செயல் முறையாகும்.