TNPSC Thervupettagam

கிம்பர்லி செயல்முறைக்கான சீர்திருத்தத் திட்டம்

February 15 , 2026 2 days 31 0
  • உலகளாவிய வைர வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டத்தில் சீர்திருத்தங்களை இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டம் என்பது மோதல்மிக்க பகுதிகளில் இருந்து எடுக்கப் படும் வைரங்களைத் தடுக்க பட்டைத் தீட்டப் பெறாத வைரங்களின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
  • கிம்பர்லி செயல்முறையின் உறுப்பு நாடுகள் மட்டுமே சான்றிதழைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பட்டைத் தீட்டப் பெறாத வைரங்களை வர்த்தகம் செய்ய முடியும்.
  • இந்தியா வைர உற்பத்தி செய்யும் நாடு அல்ல, ஆனால் உலகளாவிய பட்டைத் தீட்டப் பெறாத வைரங்களில் சுமார் 40%ஐ வெட்டுவதற்கும் மெருகூட்டுவதற்கும் இறக்குமதி செய்கிறது.
  • இந்தியாவில் உள்ள முக்கிய வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டல் மையங்கள் சூரத் மற்றும் மும்பை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்