TNPSC Thervupettagam

கிரித் பரிக் குழு

December 6 , 2022 944 days 487 0
  • கிரித் பரிக் குழுவானது, எரிவாயு விலை நிர்ணயம் குறித்த தனது அறிக்கையினை சமீபத்தில் சமர்ப்பித்தது.
  • இது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் முழு அளவிலான விலையிடல் சுதந்திரத்தை வழங்குவதற்குப் பரிந்துரை செய்தது.
  • வழக்கமான எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையினை, இந்திய அரசு முற்றிலுமாகத் தடையற்ற முறையில் மற்றும் சந்தைக்கேற்ற முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த இயற்கை எரிவாயுவில் இது 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவாகும்.
  • வழக்கமான எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்களில் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான உச்சவரம்பு வீதத்தை ஒரு mmBTU (Metric Million British Thermal Unit) அளவிற்கு 0.5 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
  • 2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியில் வழக்கமான எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவிற்கான சந்தை நிர்ணய விலையினையும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் KG-D6 போன்ற கடினமான புவியியல் அமைப்புக் கொண்ட தளங்களில் உள்ள தளங்களுக்கு தற்போதுள்ள விலை நிர்ணய சூத்திரத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு இக்குழு பரிந்துரைக்கவில்லை.
  • தற்போது, ஆழ்கடல், உயர் வெப்பநிலை, உயர் அழுத்த மண்டலங்கள் ஆகியப் பகுதிகளில் உள்ள உள்ள எண்ணெய் பிரித்தெடுப்புத் தளங்கள், இறக்குமதி செய்யப் பட்ட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலையின் கூறுகளை உள்ளடக்கிய வேறுபட்ட சூத்திரத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன.
  • இருப்பினும், அவை 12.46 அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பு விலை அளவிற்கு உட்பட்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்