கிழக்குப் பிராந்திய சரக்குப் போக்குவரத்திற்கான பிரத்தியேக தடம்
December 31 , 2020 1699 days 593 0
புதிய பாபூர் - புதிய குர்ஜா இடையிலான பிரிவு மற்றும் கிழக்குப் பிராந்திய சரக்குப் போக்குவரத்திற்கான பிரத்தியேக தடத்தின் ஒரு செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைப் பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையமானது இந்த முழு தடத்தின் நீளத்திற்கும் ஒரு கட்டளை மையமாக செயல்பட உள்ளது.
இந்தத் திட்டம் உலக வங்கியால் நிதியளிக்கப் பட்டுள்ளது.
இதன் நீளம் 1856 கி.மீ. ஆகும்.
இது லூதியானா (பஞ்சாப்) அருகிலுள்ள சஹ்னேவலில் இருந்து தொடங்கி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழியாக மேற்கு வங்காளத்தின் டாங்குனியில் முடிவடையும்.