குஜராத்தின் இரத்தன்மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு காட்டுப் புலி தொடர்ந்து ஒன்பது மாதங்களாக நிரந்தரமாக குடியேறியுள்ளது.
அங்கு ஆசிய சிங்கம், இந்தியச் சிறுத்தை மற்றும் புலி ஆகியவை ஒரே நிலப்பரப்பில் உள்ளதுடன் குஜராத் தற்போது மூன்று பெரும் பூனை இனங்களையும் கொண்டுள்ளது.
மேலும் குஜராத் இப்போது இந்தியாவில் மூன்று பெரிய பூனைகள்ஒரே இயற்கை நிலப் பரப்பில் ஒன்றாக வாழும் ஒரே இடமாகவும் மாறியுள்ளது.
இரத்தன்மஹால் வனவிலங்குச் சரணாலயம் ஆனது மத்திய குஜராத்தின் தஹோட் மாவட்டத்தில், குஜராத்-மத்தியப் பிரதேச எல்லையில் உள்ளது.
1982 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தச் சரணாலயமானது, அதனைச் சுற்றி 41 கிராமங்கள் அதன் தொடர்பு மண்டலத்தில் உள்ளதுடன், 11 கிராமங்களில் 65 சதுர கி.மீ. காப்புக் காடுகளை உள்ளடக்கியுள்ளது.
இது பல்வேறு வகைக் காடுகள், சோம்பல் கரடி எண்ணிக்கையின் அடர்த்தி மற்றும் சிறுத்தை, புனுகுப்பூனை, நான்கு கொம்புகள் கொண்ட மான், லங்கூர்கள் மற்றும் பலவற்றின் வாழ்விடங்களைக் கொண்டுள்ளது.
பனம் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ள இந்தச் சரணாலயம், புலிகள் வசிப்பதற்கு ஏற்ற நிலைமைகளைக் கொண்டுள்ளதால், இது சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்வினை காட்டுகிறது.