முதன்முறையாக, வங்க தேச முப்படைகளின் அணிவகுப்புப் படையானது குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கு பெற்றது.
இது 1971 ஆம் ஆண்டுப் போரில் பாகிஸ்தானிற்கு எதிரான இந்தியாவின் வெற்றியை அனுசரிக்கின்றது.
இந்தப் போர் வங்க தேசத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
வங்க தேச ஆயுதப் படைகளின் 122 நபர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவானது வங்க தேச இராணுவம், கடற்படை, விமானப் படையைச் சேர்ந்த வீரர்களைக் கொண்டு இதில் பங்கேற்றுள்ளது.
இது படைப்பிரிவு தலைமைத் தளபதியான அபு முகம்மது சாஹ்னூர் சவோன் மற்றும் அவரது துணை அதிகாரிகளால் வழி நடத்தப்பட்டது.