குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025
September 6 , 2025 15 hrs 0 min 14 0
மத்திய அரசு ஆனது, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணையை அறிவித்தது.
இந்த உத்தரவானது, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டது.
இது முந்தைய நான்கு சட்டங்களுக்கு மாற்றாக அமைந்தது:
கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டம், 1920,
வெளிநாட்டினர் பதிவுச் சட்டம், 1939,
வெளிநாட்டினர் சட்டம், 1946, மற்றும்
குடியேற்றம் (சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்பு) சட்டம், 2000.
இது புதிய சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்டு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த உத்தரவானது, கடவுச் சீட்டு, பயண ஆவணம் மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு விதிகளிலிருந்து விலக்குகளை வழங்குகிறது.
இதில் பணியில் இருக்கும் இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
நேபாளம் அல்லது பூடான் எல்லைகள் வழியாக நுழையும் இந்தியக் குடிமக்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
தங்கள் நாட்டு எல்லைகள் வழியாக நுழையும் நேபாளம் மற்றும் பூடான் குடிமக்களுக்கும் இது பொருந்தும்.
பதிவு செய்யப்பட்ட திபெத்திய அகதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சில சிறுபான்மைச் சமூகங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்துவர்கள் இதில் அடங்குவர்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதி வரை இந்தியாவிற்குள் நுழைந்த பதிவு செய்யப் பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரும் இதில் அடங்குவர்.