TNPSC Thervupettagam

குறைகடத்திக்கான செயல்திட்ட வரைபடம் 2035

June 3 , 2026 11 days 156 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, இந்தியாவின் முதல் விரிவான 10 ஆண்டு குறை கடத்திக்கான செயல்திட்ட வரைபடமான "இந்திய குறைகடத்தி தொழில்துறையின் எதிர்காலம்" என்பதை வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைபடம் 2035 ஆம் ஆண்டிற்குள் $120-150 பில்லியன் மதிப்பிலான உள்நாட்டு குறைகடத்தி மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா தற்போது தனது குறைகடத்தி தேவைகளில் 90-95% இறக்குமதி செய்கிறது.
  • இந்தியாவின் குறைகடத்தி துறைக்கான சந்தை 2035 ஆம் ஆண்டிற்குள் $200 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த செயல்திட்ட வரைபடம், OSAT (வெளிமுகப்படுத்தப்பட்ட குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை), முதிர்ந்த தர்க்க முடிச்சுகள் மற்றும் கூட்டு குறைகடத்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • உலகளாவிய குறைகடத்தி வடிவமைப்பு பணியாளர்களில் 20% பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதோடு மேலும் 2035 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய குறைகடத்திகள் சந்தையில் 10-13% பங்கினைப் பெற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்