பல ஆண்டுகளாகப் படிக்கப்படாமல் இருந்த குற்றால மலைகளில் உள்ள பழமையான கல்வெட்டு ஒன்று வெற்றிகரமாக பொருள் விளக்கம் அறிந்து வாசிக்கப்பட்டுள்ளது.
2.5 ஆண்டுகால விரிவான ஆராய்ச்சிக்கு பிறகு கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாத்தூர் பி. பாவேந்தன் ஆகியோரால் இக்கண்டுபிடிப்பு பொருள் விளக்கம் அறிந்து வாசிக்கப் பட்டுள்ளது.
இக்கல்வெட்டு சுமார் 1000 மீட்டர் உயரத்தில் உள்ள சந்நியாசி புடவு குகையில் அமைந்துள்ளது.
தமிழ் மொழிச் சொற்களைக் குறிக்க திருத்தப்பட்ட குறியீட்டு அடையாளங்களுடன் பிராகிருத-பிராமி எழுத்துமுறையை இது பயன்படுத்துகிறது.
ஆராய்ச்சியாளர்கள் 15 எழுத்துக்களில் 14 எழுத்துக்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவற்றை வாசிப்பதற்கு என கணித முறைகளையும், சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகளுடனான ஒப்பீட்டையும் பயன்படுத்தினர்.
வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்டாலும் அறிவு ஒன்றே என்பதை உணர்த்தி, விவேகம் மற்றும் ஒற்றுமையை இச்செய்தி சிறப்பித்துக் காட்டுகிறது.
முன்னதாகக் இந்தக் குகை மற்றும் கல்வெட்டுகள் பற்றி ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1917 ஆம் ஆண்டு திருநெல்வேலி அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.