குளிர்கால கூட்டத்தொடர் - மக்களவை மற்றும் மாநிலங்களவை
December 28 , 2021 1308 days 671 0
பாராளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் அவற்றின் அசல் கால அட்டவணைக்கு ஒரு நாள் முன்னதாகவே, டிசம்பர் 22 ஆம் தேதியன்று தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப் பட்டது.
இது குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் உள்ளது
18 அமர்வுகள் நடைபெற்ற மக்களவையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மற்றும் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா போன்ற முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "கட்டுப்பாடற்ற முறையில்" நடந்து கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலவை அதன் அமர்வின் போது பல தடங்கல்களை எதிர்கொண்டது.
நவம்பர் 29 ஆம் தேதியன்று தொடங்கிய குளிர்காலக் கூட்டத் தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதியன்று முடிவடைந்தது.