குழந்தைகளுக்கான வாய்வழியாகச் செலுத்தும் இரும்புச்சத்து சிகிச்சை
December 26 , 2025 13 days 64 0
இரும்புச்சத்து குறைபாடுள்ள 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அக்ரூஃபர் எனும் வாய்வழி மருந்தினை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது.
இது அன்றாட வாழ்க்கையில் சிறப்பாக பொருந்தக்கூடிய ஒரு புதிய, உடலில் ஊடுருவாத வகையிலான சிகிச்சை விருப்பத் தேர்வினை வழங்குகிறது.
இரும்புச்சத்து குறைபாடு ஆனது இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணம் ஆகும்.
இது தொடர்ச்சியான சோர்வு, கவனம் குறைதல், தாமதமான வளர்ச்சி மற்றும் மோசமான கல்வி செயல்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
அக்ரூஃபர் 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பெரியவர்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது.