HDFC ERGO என்ற பொதுக் காப்பீட்டு நிறுவனமானது, “கொசுக்கடியால் ஏற்படும் நோய்ப் பாதுகாப்பிற்கான ஒரு காப்பீட்டுத் திட்டத்தினைத்” தொடங்கியுள்ளது.
இது கொசுவால் மனிதர்களுக்குப் பரவும் பொதுவான நோய்களான டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், கருங் காய்ச்சல், நிணநீர் யானைக்கால் வியாதி மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை உள்ளடக்கும்.
தேசிய சுகாதார தரவுதள விவரம் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின் படி 2009-2017 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவில் 300 சதவிகித அளவிற்கு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.