கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு WHO மற்றும் EU ஆகியவற்றின் ஒப்புதல்
May 27 , 2021 1522 days 583 0
ஐரோப்பியப் பகுதியைச் சாராத நாடுகளிலிருந்து முழு தடுப்பு மருந்தினையும் செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை சில வரையறைகளுடன் அனுமதிப்பதற்கான ஒரு முன்மொழிதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளன.
இதற்காக அந்த சுற்றுலாப் பயணிகள் செலுத்திக் கொண்ட தடுப்பூசியானது உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதுபற்றி ஆராய்ந்து, உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலில் கோவாக்சின் தடுப்பு மருந்தினை இடம்பெறச் செய்வதற்கான உதவியைப் பெறுதல் போன்ற பொறுப்புகள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் வழங்கப் பட்டுள்ளன.