TNPSC Thervupettagam

சபாசார் முன்முயற்சி

February 8 , 2026 9 days 73 0
  • சபாசார் முன்முயற்சி என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியாகும்.
  • இது ஒலி மற்றும் காணொளிப் பதிவுகளைத் தானாகவே உரைச் சுருக்கங்களாக மாற்றுவதன் மூலம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்துக் கூட்டங்களை ஆவணப் படுத்துவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா AI திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில் நுட்பத்தில் செயல்படும் சபாசார் கருவியானது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் கிடைக்கிறது.
  • இந்தக் கருவி கூட்டங்களின் கட்டமைக்கப்பட்ட கூட்டக் குறிப்புகளை உருவாக்க உதவுகிறது மற்றும் நாடு முழுவதும் ஒரு சீரான தன்மையை உறுதி செய்கிறது.
  • அரசாங்கத்தின் செயற்கை நுண்ணறிவு மொழித் தளமான பாஷினி மூலம் இயக்கப் படுகின்ற சபாசார் கருவியானது இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.
  • இந்த முன்முயற்சியானது ஆவணப்படுத்துதலை எளிதாக்கி, நிர்வாக அமைப்புகளுக்கு உதவுகிறது, மேலும் கூட்டங்களின் முக்கிய அம்சங்களை உடனடியாக அணுகுவதன் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்