TNPSC Thervupettagam

சமூகப் பாதுகாப்பு நெறிமுறை – 142வது பிரிவு

May 8 , 2021 1528 days 643 0
  • தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகமானது சமீபத்தில் 2020 ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு நெறிமுறையின் 142வது பிரிவினை அறிவித்துள்ளது.
  • இந்தப் பிரிவானது ஆதார் எவற்றிற்கெல்லாம் பொருந்தும் என்பது பற்றி விவரிக்கச் செய்கிறது.
  • இந்த அறிவிப்பானது பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயனாளர்களிடமிருந்து ஆதார் தகவல்களைச் சேகரிப்பதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு உதவும்.
  • இதனுள் புலம்பெயர் தொழிலாளர்களும் அடங்குவர்.
  • ஒரு ஊழியர் (அ) அமைப்பு சாரா நபர் (அ) வேறு எவரும் அரசுத் திட்டங்களின் மூலம் பயன் பெறுவதற்கு ஆதார் தகவல்கள் கட்டாயம் என 142வது பிரிவு கூறுகிறது.
  • இதன் மூலம் பெறப்படும் பயன்களாவன : மருத்துவ சிகிச்சைக்கானப் பண உதவி, தொழில் சேவை மையங்களை அணுகுதல், மகப்பேறு உதவிகள், காப்பீட்டுத் தொகையினைப் பெறுதல் போன்றவையாகும்.
  • சமூகப் பாதுகாப்பு நெறிமுறையானது 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்