மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகமானது “அரசு மின்னணுச் சந்தைத் தளம்” (GeM - Government E Marketplace) மீது “சாரஸ் சேகரிப்பு” என்ற ஒரு சேகரிப்பைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், GeM, தீன் தயாள் அந்தியோதயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (Day-NRLM - National Rural Livelihood Mission) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
சாரஸ் சேகரிப்பானது சுய உதவிக் குழுக்களினால் தயாரிக்கப்படும் தினசரிப் பயன்பாட்டுப் பொருட்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
GeM என்பது தேசியப் பொதுக் கொள்முதல் தளமாக அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படும் ஒரு தளமாகும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளினால் அதற்குத் தேவைப் படும் சரக்குகள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.