ஒரு புதிய ஆய்வானது சிந்து சமவெளி நாகரித்தில் (Indus Valley Civilization - IVC) விலங்கின் உடல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளது.
இது பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி பயன்படுத்தப் பட்டுள்ளதையும் உள்ளடக்கியுள்ளது.
மக்கள் தங்களது பால்வளத் தேவைகளுக்காகவும் வேண்டி கால்நடைகளை வைத்து இருந்தனர்.
மேலும் இந்த ஆய்வானது கோடை காலம் மற்றும் குளிர் காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப்படும் முறை நடைமுறையில் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளது.
இங்கு பார்லி, கோதுமை, அரிசி மற்றும் தானியங்கள் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
இது IVC நாகரீகத்தில் 4600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும்.
இந்த ஆய்வானது உத்தரப் பிரதேசத்தின் ஆலம்கீர்பூரில் உள்ள 4 கிராமங்கள் மற்றும் ஹரியானாவில் 5 இடங்கள் என 5 தளங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயிலும் அக்சயேத்தா சூரியநாராயணா என்பவரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது தொல்லியல் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.