TNPSC Thervupettagam

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்

December 15 , 2020 1618 days 1108 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்சத் மார்க்கில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்தத் திட்டத்தின் கட்டுமானத்திற்கு டாடா திட்ட நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது ரூ.971 கோடி செலவில் 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.
  • இந்தப் பணி 2022 அல்லது அதற்கு முன்பு முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்தியாவானது தனது எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை 2022 ஆம் ஆண்டில் கொண்டாட உள்ளது.
  • இந்தப் புதிய பாராளுமன்றக் கட்டிடமானது, 888 கீழவை இருக்கைகளுடனும் 384 மேலவை இருக்கைகளுடனும் சேர்த்து ஒரு மிகப்பெரிய மக்களவை மற்றும் மாநிலங்களவை வளாகத்தைக் கொண்டிருக்கும்.
  • இது நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத் தொடரின் போது 1224 உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடமானது தற்பொழுது உள்ள நாடாளுமன்றத்தில் உள்ளவாறு மைய வளாகத்தைக் கொண்டிருக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்