TNPSC Thervupettagam

சிந்து சமவெளி நாகரிகத்தில் (IVC) இறைச்சி

December 15 , 2020 1618 days 680 0
  • ஒரு புதிய ஆய்வானது சிந்து சமவெளி நாகரித்தில் (Indus Valley Civilization - IVC) விலங்கின் உடல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளது.
  • இது பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி பயன்படுத்தப் பட்டுள்ளதையும் உள்ளடக்கியுள்ளது.
  • மக்கள் தங்களது பால்வளத் தேவைகளுக்காகவும் வேண்டி கால்நடைகளை வைத்து இருந்தனர்.
  • மேலும் இந்த ஆய்வானது கோடை காலம் மற்றும் குளிர் காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப்படும் முறை நடைமுறையில் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளது.
  • இங்கு பார்லி, கோதுமை, அரிசி மற்றும் தானியங்கள் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
  • இது IVC நாகரீகத்தில் 4600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும்.
  • இந்த ஆய்வானது உத்தரப் பிரதேசத்தின் ஆலம்கீர்பூரில் உள்ள 4 கிராமங்கள் மற்றும் ஹரியானாவில் 5 இடங்கள் என 5 தளங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயிலும் அக்சயேத்தா சூரியநாராயணா என்பவரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது தொல்லியல் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்