TNPSC Thervupettagam

சிர்பூர் தொல்பொருள் தளம்

November 30 , 2025 12 days 72 0
  • சிர்பூர் என்பது சத்தீஸ்கரின் மகாசமுண்ட் மாவட்டத்தில் உள்ள 5-12 ஆம் நூற்றாண்டுகளின் பல்சமயம் சார் தொல்பொருள் நகரமாகும்.
  • இது ராய்ப்பூருக்கு அருகில் மகாநதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
  • பாண்டுவன்ஷி மற்றும் சோமவம்ஷி மன்னர்களின் (6-8 ஆம் நூற்றாண்டு) கீழ் தட்சிண கோசலத்தின் தலைநகராக சிர்பூர் இருந்தது.
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 22 சிவன் கோயில்கள், 5 விஷ்ணு கோயில்கள், 10 புத்த விஹாரங்கள் மற்றும் 3 சமண/ஜைன விஹாரங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • முக்கிய நினைவுச்சின்னங்களில் 7 ஆம் நூற்றாண்டு இலட்சுமண கோயில், சுரங் திலா கோயில் வளாகம், 8 ஆம் நூற்றாண்டு தீவர்தேவ் புத்த விஹார மற்றும் பாலேஷ்வர் கோயில் ஆகியவை அடங்கும்.
  • சிர்பூரின் கட்டிடக்கலை ஆனது சைவ, வைணவ, பௌத்த மற்றும் சமண மரபுகளை ஒன்றிணைத்து காணப்படுகிறது.
  • இந்த இடத்தில் அரண்மனைகள், சந்தைகள், ஸ்தூபங்கள், மடங்கள், தியான அறைகள், நீர் விநியோக அமைப்புகள் மற்றும் 6 ஆம் நூற்றாண்டு சந்தை வளாகம் ஆகியவை அடங்கும்.
  • சத்தீஸ்கர் மாநில அரசு ஆனது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளத்தின் பட்டியலில் பரிந்துரைக்கப் படுவதற்காக தயாராகி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்