சுகாதார சேவையில் நான் முதல்வன் திட்டத்தின் விரிவாக்கம்
November 26 , 2025 9 days 59 0
சுகாதாரச் சேவைத் துறையில் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக செவிலியர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் துறைகளுக்கு நான் முதல்வன் திட்டத்தினை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது.
இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், நவீன மருத்துவமனை சூழல்களில் அவசியமான தகவல் தொடர்பு திறன் மற்றும் டிஜிட்டல் திறன்களில் மாணாக்கர்கள் சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.
தமிழ்நாடு ஒரு முக்கிய மருத்துவச் சுற்றுலா மையமாக இருப்பதால், மாணாக்கர்கள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடன் திறம்பட தொடர்பு கொள்ள உதவுவதையும், வெளிநாடுகளில் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் தங்கள் சுயவிவரங்களைப் பதிவேற்றுவதற்கு TNSkill Registry என்ற இலவச வலை தளத்தினை TNSDC அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட முதலாளிகள் அந்த விவரங்களைப் பார்த்து அவர்களின் ஒப்புதலுடன் பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.