TNPSC Thervupettagam

சுதந்திரத் தின உரை : 7 சிறப்பம்சங்கள்

August 18 , 2022 1078 days 500 0
  • இந்தியாவின் 76வது சுதந்திரத் தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடத்தப் பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
  • சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்ப அரும்பாடுபட்டவர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து தனது உரையைத் தொடங்கச் செய்தார்.
  • அயல் நாடுகளிடமிருந்து அனுமதிப் பெறுவதற்கு வழிவகுக்கும் ‘குலாமி’ என்ற அடிமை எண்ணத்தினை மக்கள் கைவிட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.
  • காலனித்துவத்தின் எஞ்சிய அதிகாரங்களை அகற்றவும் நமது அடிப்படைத் தோற்றத்தினைத் தக்க வைத்துக் கொள்ளவும்  வேற்றுமையில் ஒற்றுமையை உறுதிப் படுத்தவும் தங்களது கடமையைச் செய்யுமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
  • ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியாவில் நிலவும் இரண்டு மிகப்பெரியச் வால்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
  • நாட்டிலிருந்து ஊழலையும் வாரிசு அரசியலினையும் அகற்ற வேண்டும் என அவர் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
  • 130 கோடி மக்களின் ஒட்டு மொத்த மனப்பான்மையினை ‘இந்திய மக்கள்’ (டீம் இந்தியா) என்றவாறு மாற்றவும், அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சிப் பெற்ற நாடாக இந்தியா மாற உள்ளதை  உறுதி செய்யவும் வேண்டி நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்லவும் அவர் மக்களிடம் அழைப்பு விடுத்தார்.
  • பிரதமர் அவர்கள் அம்ரித் கால் என்பதற்காக 5 தீர்மானங்களை அல்லது “பஞ்ச் பிரான்” அல்லது ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சி பெற்ற இந்தியா) என்பதற்காகச் செயல்படுதல் என்பதை முன்வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்