TNPSC Thervupettagam
March 5 , 2026 2 days 59 0
  • QT45 எனப்படும் சுய-பிரதிபலிப்பு RNA மூலக்கூறைக் கண்டுபிடித்த பிறகு, RNA பூமியின் முதல் மரபணுப் பொருளாக இருந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • QT45 என்பது 45 நியூக்ளியோடைடுகளைக் கொண்ட ஒரு சிறிய RNA மூலக்கூறு ஆகும், இது சிறப்பு நிலைமைகளின் கீழ் தன்னை தானே நகலெடுக்க முடியும்.
  • இது RNA உலக கருதுகோளை ஆதரிப்பதோடு DNA மற்றும் புரதங்கள் உருவாகும்  முன்பு ஆரம்பகால வாழ்க்கை RNA ஐ மட்டுமே சார்ந்திருந்தது என்பதைக் குறிக்கிறது.
  • 1953 இல் மில்லர்-யூரே பரிசோதனையானது ஆரம்பகாலப் பூமியின் நிலைமைகளின் கீழ் அமினோ அமிலங்கள் உருவாகக் கூடும் என்பதைக் காட்டியது ஆனால் அது DNA அல்லது RNA ஐ உருவாக்கவில்லை.
  • QT45 மூன்று-நியூக்ளியோடைடு கட்டுமானத் தொகுதிகளைப் பயன்படுத்தித் தன்னை படியெடுக்கிறது ஆனால் நவீனகால செல்களுடன் ஒப்பிடும் போது செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்