TNPSC Thervupettagam

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா, 2021

March 24 , 2021 1574 days 622 0
  • இம்மசோதா 1957 ஆம் ஆண்டு கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
  • இது மூலோபாய மற்றும் வணிகச் சுரங்களுக்கிடையேயான வேறுபாட்டை அகற்றச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மாவட்டக் கனிம அறக்கட்டளையினால் பராமரிக்கப்படும் நிதிகளின் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்த வழிமுறைகளை வழங்குவதற்கு வேண்டி மத்திய அரசிற்கு அதிகாரமளிக்கிறது.
  • ஏதேனும் ஒரு சுரங்கத்தை (நிலக்கரி, லிக்னைட் மற்றும் அணு கனிமங்கள் தவிர) ஏலத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட தாதுவின் உற்பத்தி மீதான பயன்பாட்டிற்காக (எஃகு தொழிற்சாலைக்கான இரும்புத் தாது) குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசிற்கு இம்மசோதா அனுமதியளிக்கிறது.
  • 1957 ஆம் ஆண்டு கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், கனிமங்களுக்கான சலுகை ஏலங்களை (நிலக்கரி, லிக்னைட் மற்றும் அணு கனிமங்கள் தவிர) மாநில அரசுகள் நடத்தும் எனக் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்