வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளன.
சுவச் பாரத் திட்டம் நகர்ப்புறம் 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது.
நாட்டில் கழிவு மேலாண்மைத் துறையை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப் பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டில் 75 ஸ்மார்ட் ஸ்வச்சதா கேந்திர மையங்களை அமைக்க ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு உதவும்.
மேலும் முறைபடுத்தப்படாத கழிவுச் சேகரிப்பு ஊழியர்களை ஒன்றிணைக்கவும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு இந்தியாவிற்கு உதவும்.
அவர்களை அரசு நலத் திட்டங்களுடன் இணைப்பதில் இந்தியாவிற்கு இந்த அமைப்பு உதவி வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு திடக்கழிவு மேலாண்மையிலும் உபயோகித்த கழிவு நீர் மேலாண்மையிலும் இந்தியாவிற்கு உதவி வழங்கும்.
மேலும், கழிவு மேலாண்மைக்காக நிலையான ஒரு மாதிரியை மேம்படுத்தி அதை உபயோகிக்கவும் இந்தியாவிற்கு இந்த அமைப்பு உதவிகளை வழங்கும்.