TNPSC Thervupettagam

சுவிட்சர்லாந்தில் அலெட்ச் பனிப்பாறை உருகும் நிகழ்வு

October 7 , 2026 4 days 72 0
  • சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பனிப்பாறையான அலெட்ச் பனிப்பாறை (Aletsch Glacier), குளிர்காலத்தில் குறைந்த பனிப்பொழிவு மற்றும் கோடையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை காரணமாக 2026 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய வருடாந்திர உருகுதலைப் பதிவு செய்துள்ளது.
  • சுவிஸ் பனிப்பாறை கண்காணிப்பு வலையமைப்பின் (GLAMOS) கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் சுவிஸ் பனிப்பாறைகள் தங்களின் பனியில் 5% க்கும் அதிக அளவை இழந்துள்ளன.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில், சுவிஸ் பனிப்பாறைகள் தங்களின் பனியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை இழந்துள்ளன.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் சுவிஸ் பனிப்பாறைகள் சுமார் 2.2 டிரில்லியன் லிட்டர் தண்ணீரை இழந்துள்ளன, இது சுவிஸ் குடும்பங்களின் வருடாந்திர குடிநீர் பயன்பாட்டை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
  • சான்ஃப்ளூரான் பனிப்பாறை (Glacier de Tsanfleuron) இந்த ஆண்டில் 4 மீட்டருக்கும் அதிகமான சராசரி பனி தடிமனை இழந்துள்ளது.
  • இந்த உருகுதலானது குளிர்காலத்தில் குறைந்த பனிப்பொழிவு மற்றும் கோடையில் நிலவிய கடுமையான வெப்பம் ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது ஆல்பைன் பனிப்பாறைகளில் உயர்ந்து வரும் வெப்பநிலையின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்