TNPSC Thervupettagam

சென்னை விமான நிலையப் பயணிகள் போக்குவரத்து

June 1 , 2026 16 days 140 0
  • பயணிகள் போக்குவரத்து அடிப்படையில் கொல்கத்தா விமான நிலையத்தை விடப் பின்தங்கிய சென்னை சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் 6-வது பரபரப்பான விமான நிலையமாக இடமிறங்கியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சென்னை 17.3 லட்சம் பயணிகளையும், கொல்கத்தா 17.6 லட்சம் பயணிகளையும் கையாண்டுள்ளன.
  • கடந்த பத்து ஆண்டுகளில், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்து 24% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ள அதே வேளையில் பெங்களூரு 105% மற்றும் ஹைதராபாத் 100% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் மற்றும் விமான தள உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் போக்குவரத்து அதிகரிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
  • முன்மொழியப்பட்டுள்ள பரந்தூர் புதிய விமான நிலையம், தமிழ்நாட்டின் இணைப்பை மேம்படுத்தும், முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்