TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் மின்னியல் செயல்பாடு

December 6 , 2025 6 days 62 0
  • செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தில் சுழல் காற்று மற்றும் தூசிப் புயல்களின் போது சிறிய மின்னல் எனப்படும் சிறிய மின் வெளியேற்றங்கள் ஏற்பட்டதை நாசாவின் பெர்செவரன்ஸ் உலாவிக் கலம் கண்டறிந்துள்ளது.
  • இரண்டு செவ்வாய்க் கிரக  ஆண்டுகளில் இது போன்ற சுமார் 55 வெளியேற்றங்களை அறிவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
  • தூசி அல்லது மணல் துகள்கள் ஒன்றாக மேலெழுந்து, நிலையான மின்னூட்டத்தை உருவாக்கி, பின்னர் அதை மின் தீப்பொறிகளாக (மின் பொறி) உமிழும் போது ஏற்படும் உராய்வு மின்னியல் (ட்ரிபோ எலக்ட்ரிக்) விளைவிலிருந்து இந்த வெளியேற்றங்கள் எழுவதாக நம்பப் படுகிறது.
  • தீப்பொறிகள் நிலையான மின்னியல் இரைச்சலை ஏற்படுத்துகின்றன மேலும் சில நேரங்களில் தூசி சுழல்கள் உலாவிக் கலத்திற்கு அருகில் செல்லும்போது குறு ஒலி அதிர்வுகள் (மினி சோனிக் பூம்ஸ்) எனப்படும் லேசான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்