2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை 'சோயா உணவை' ஒரு அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பதற்காக வேண்டி 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்களின் சட்டத்தின் கீழ் அரசாங்கம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சந்தையில் சோயா உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தக் கூடிய எந்தவொரு நியாயமற்ற நடைமுறைகளையும் (பதுக்கல், கள்ளச் சந்தை போன்றவை) நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கோழிப் பண்ணைகள் மற்றும் கால்நடை உணவு உற்பத்தியாளர்களைப் போன்ற நுகர்வோர்களுக்கு இந்தப் பொருட்களின் சரக்குகள் மீதான கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.